மத்தியக் கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளத் துறை அமைச்சகமானது தேசியப் பால் பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் (National Dairy Development Board - NDDB) துணை நிறுவனங்களுக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் விதிமுறைகளை நீட்டிக்குமாறு, அந்த அமைப்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளது.
வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமை மற்றும் நுகர்வோர்களின் நம்பிக்கை ஆகியவற்றை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது.
NDDB என்பது இந்தியப் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைப்பாகும்.
இது 1965 ஆம் ஆண்டில் டாக்டர் வர்கீஸ் குரியன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் குஜராத் மாநிலத்தின் ஆனந்த்தில் அமைந்துள்ளது.