தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – 07 நவம்பர்
November 8 , 2021 1428 days 403 0
புற்றுநோய், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதற்காக வேண்டி இந்தியாவில் ஆண்டுதோறும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
உலகளவிலான உயிரிழப்புகளுக்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
2018 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 18 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ள வேளையில் அவற்றில் இந்தியாவில் மட்டும் 1.5 மில்லியன் வழக்குகள் பதிவாகி உள்ளன.
2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 0.8 மில்லியன் மக்கள் மற்றும் உலகளவில் 9.5 மில்லியன் மக்கள் என்ற அளவில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் பதிவாகின.
2014 ஆம் ஆண்டு நவம்பர் 07 அன்று, முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நவம்பர் மாதத்தின் ஏழாவது நாள் தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.