தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் 2025 - நவம்பர் 07
November 10 , 2025 72 days 121 0
இந்த நாளின் நோக்கம் ஆனது பொது விழிப்புணர்வு, ஆரம்பகால நோயறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை மூலம் புற்றுநோயின் பாதிப்பைக் குறைப்பதாகும்.
மேரி கியூரியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தத் தேதி தேர்வு செய்யப் பட்டு முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இந்தியாவில், சுமார் 20 முதல் 25 லட்சம் பேர் புற்றுநோய் பாதிப்புடன் வாழ்கின்றனர் என்பதோடு இங்கு ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட சுமார் 7 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகின்றன.
இந்தியாவில் உள்ள மொத்தப் புற்றுநோய்களில் சுமார் 34 சதவீதப் பாதிப்புகளுக்கு புகையிலை பயன்பாடு காரணமாக உள்ளது.