மக்களவையானது 2019 ஆம் ஆண்டின் தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA - National Investigation Agency) திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
பின்வரும் குற்ற வழக்குகள் NIA வினால் விசாரணை செய்ய முடியும்.
ஆள் கடத்தல்
போலி நாணயங்கள் மற்றும் வங்கிப் பணம் தொடர்பான குற்றங்கள்
தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை
இணைய வழிக் குற்றம்
வெடி பொருள் சட்டம், 1908 -ன் கீழுள்ள குற்றங்கள்
இந்தியா முழுவதும், இதுபோன்ற குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக மற்ற காவல் துறை அதிகாரிகளைப் போல NIA அதிகாரிகளும் அதிகாரங்களைக் கொண்டு இருப்பர்.
இந்த வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக அதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நீதிபதிகளின் நியமனங்கள் இடமாறுதல்/தாமதம் ஆகியவற்றின் மூலம் இந்த வழக்குகள் தாமதமாகாது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் சொத்துகள் மற்றும் இந்தியத் தூதரகங்களுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் குறித்தும் இந்த அமைப்பு விசாரிக்கும்.
NIA பற்றி
NIA ஆனது மத்திய தீவிரவாதத் தடுப்புச் சட்ட அமலாக்க அமைப்பாக செயல்படுவதற்கு 2008 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
மாநிலங்களில் இருந்து சிறப்பு அனுமதி இல்லாமல் மாநிலங்களில் தீவிரவாதம் தொடர்பான குற்றங்களை விசாரிக்க இந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.