அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தப் பட்ட தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் 20வது அமர்விற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமை ஏற்றார்.
இந்த அமர்வானது, அருணாச்சலப் பிரதேசத்தின் பக்கே புலிகள் காப்பகத்தில் நடத்தப் பட்டது.
தேசியத் தலைநகரைத் தவிர்த்து வேறு ஓர் இடத்தில் தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் அமர்வு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
புலிகள் வளங்காப்பகங்களுக்கான ஒரு காட்டுத் தீ தணிக்கை நெறிமுறையை இந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.
முழு சுழற்சி அளவில் காட்டுத்தீ நிகழ்வுகளுக்கான தயார்நிலை மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதில் இது புலிகள் வளங்காப்பு மேலாண்மை அதிகாரிகளுக்கு உதவும்.