அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகமானது, 2022 ஆம் ஆண்டிற்கான தேசியப் புவியியல் கொள்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
இது தேசிய மேம்பாடு, பொருளாதாரச் செழிப்பு மற்றும் வளர்ந்து வரும் தகவல் பொருளாதாரம் ஆகியவற்றினை ஆதரிப்பதற்காக புவிசார் துறையை வலுப்படுத்த முயல்கின்ற, குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு கொள்கையாகும்.
2030 ஆம் ஆண்டிற்குள், உயர் துல்லியமிக்க எண்ணிம புவிப்பரப்பு மாதிரியுடன் கூடிய (DEM) உயர் தெளிவுத்திறன் கொண்ட நிலப்பரப்பு ஆய்வு மற்றும் வரைபடமிடல் முறையை நிறுவுவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் புவிசார் பொருளாதாரம் ஆனது, 2025 ஆம் ஆண்டில் 12.8% என்ற வளர்ச்சி விகிதத்தில் ரூ.63,000 கோடியைத் தாண்டும் என்றும், 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.