தேசியப் பொதுப் பேருந்துப் போக்குவரத்து விருதுகள் 2023-24
March 13 , 2025 260 days 307 0
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகமானது, 2023-24 ஆம் ஆண்டிற்கான 19 தேசியப் பொதுப் பேருந்து போக்குவரத்து விருதுகளைப் பெற்றுள்ளன.
இதில் கும்பகோணம் பிரிவு ஆனது, 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநிலச் சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் சங்கத்தின் (ASRTU) வழங்கப்பட்ட ஐந்து தேசியப் பொதுப் பேருந்து போக்குவரத்து விருதுகளைப் பெற்றுள்ளது.
TNSTC சேலம் மற்றும் மதுரை பிரிவுகள் ஆனது தலா நான்கு விருதுகளைப் பெற்று உள்ளன.
மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆனது மூன்று விருதுகளை வென்று உள்ளது.
சென்னையின் MTC ஆனது இரண்டு விருதுகளையும், TNSTC விழுப்புரம் பிரிவு ஆனது ஒரு விருதையும் பெற்றுள்ளன.