மத்திய வர்த்தக மற்றும் தொழிற் துறை அமைச்சரான பியூஷ் கோயல் தேசியப் பொது கொள்முதல் மாநாட்டின் (National Public Procurement Conclave - NPPC) 3வது பதிப்பைப் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாடானது இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry - CII) இணைந்து அரசின் மின்னணுச் சந்தையிடல் (Government e-Marketplace - GeM) தளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
NPCC ஆனது பொதுக் கொள்முதல் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளுடன் பொருள்களை வாங்குபவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில் துறையின் முக்கியமான வணிகர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கின்றது.