தேசியப் போர் நினைவுச் சின்னத்தின் 3வது ஆண்டு விழா 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று அனுசரிக்கப்பட்டது.
தேசியப் போர் நினைவுச் சின்னம் ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தேசியப் போர் நினைவுச் சின்னமானது, சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற ஆயுதம் ஏந்திய மோதல்களில் பங்கேற்றுப் போராடிய அனைத்து வீரர்களையும் கௌரவிக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் போர் நினைவுச் சின்னம் ஆகும்.
1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய-சீனப் போரிலும், 1947, 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர்களிலும், 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரிலும் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த நினைவிடம் திகழ்கிறது.