தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ப்பெருக்க வளங்கள்
October 5 , 2024 304 days 268 0
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ப் பெருக்க (BBNJ) வளங்கள் ஒப்பந்தம் அல்லது "பெருங்கடல் ஒப்பந்தம்" என்ற சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமில்லாத கடல் பகுதிகளில் காணப்படும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதே BBNJ ஒப்பந்தத்தின் குறிக்கோள் ஆகும்.
இந்தப் பகுதிகள் ஆனது எந்தவொரு நாட்டின் கடற்கரையிலிருந்தும் 370 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி உலகின் மூன்றில் இரண்டு பங்கு அளவில் பெருங்கடல்களை உள்ளடக்கியது.