தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்கம் தொடர்பான உயர் லட்சியக் கூட்டணி
February 15 , 2022 1292 days 563 0
பெருங்கடல் உச்சிமாநாட்டின் கடைசி நாளில், இந்த அறிவிப்பானது அறிமுகப் படுத்தப் பட்டது.
பெருங்கடல் உச்சி மாநாடு பிரெஞ்சு அதிபரின் தலைமையில் ஏற்பாடு செய்யப் பட்டது.
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம் ஆனது "Treaty of the High Seas" என்றும் அழைக்கப்படுகிறது.
இது தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத் தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு பற்றிய ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகள் கடலின் 95% பகுதிகளாகும்.
இந்த ஒப்பந்தமானது கடல் நிர்வாகத்தில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும் அதில் உள்ள பலவீனங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு வாய்ப்பினை வழங்குகிறது.
இது பற்றி தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிப்ரவரி 11 ஆம் தேதி நிலவரப்படி, ஆஸ்திரேலியா, சிலி, கனடா, கொமோரோஸ், கொலம்பியா, இந்தியா, மொனாக்கோ, எகிப்து, பெரு, மொராக்கோ, நார்வே, காங்கோ குடியரசு, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், டோகோ, ஐக்கிய இராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.