தேசிய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட பல்லுயிர் குறித்த ஒப்பந்தம் – இந்தியா
July 12 , 2024 486 days 396 0
இந்திய அரசானது, விரைவில் தொலைதூரப் பெருங்கடல் பகுதி மீதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க உள்ளது.
இது பெருங்கடல்களின் சுற்றுச்சூழல் வளத்தினைப் பேணுவதற்கான ஒரு புதிய சர்வ தேச சட்டக் கட்டமைப்பாகும்.
இது மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும், பெருங்கடல் நீரில் உள்ள பல்லுயிர் மற்றும் பிற கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றின் நீடித்த மற்றும் நிலையான பயன்பாட்டிற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தமானது தேசிய அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்ட பல்லுயிர்ப் பெருக்கம் (BBNJ) என்றும் அழைக்கப்படுகிறது.
இது தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத் தன்மையின் வளங்காப்பு மற்றும் நிலையானப் பயன்பாடு குறித்த ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
96 நாடுகள் ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதோடு அவற்றில் எட்டு நாடுகள் அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளன.