TNPSC Thervupettagam

தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் 2022

September 17 , 2022 1030 days 471 0
  • இந்தப் பட்டியலில் 34 மருந்துகள் கூடுதலாக சேர்க்கப்பட்டதுடன் மொத்தமாக 384 மருந்துகள் சேர்க்கப் பட்டுள்ளன.
  • முந்தையப் பட்டியலில் இருந்து 26 மருந்துகள் விலக்கப் பட்டுள்ளன.
  • இந்த மருந்துகள் 27 சிகிச்சை வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
  • இதன் மூலம், பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தடுப்பூசிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவதன் மூலம் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும்.
  • தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல் ஆனது அனைத்து நிலை சுகாதாரப் பாதுகாப்புகளிலும் மலிவு விலையில் தரமான மருந்துகளை அணுகுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இந்தப் பட்டியல் தேசிய மருந்தியல் விலை நிர்ணய ஆணையத்தால் வெளியிடப்படும் ஒரு பட்டியல் ஆகும்.
  • சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் முதன்முதலில் 19996 ஆம் ஆண்டில் 279 மருந்துகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டது.
  • இந்தப் பட்டியல் அடுத்து 2003, 2011, 2015 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் திருத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்