தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு குறித்த தொகுப்பு அறிக்கை 2022
November 1 , 2022 987 days 481 0
2022 ஆம் ஆண்டிற்கான தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு குறித்த தொகுப்பு அறிக்கையானது பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டு அமைப்பினால் (UNFCCC) வெளியிடப்பட்டது.
இது உலக நாடுகளின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் அவற்றின் தாக்கம் ஆகியவை தொடர்பான ஒரு வருடாந்திரத் தொகுப்பு அறிக்கையாகும்.
தற்போதைய நிலையில் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வானது இந்தப் பத்தாண்டுகளின் இறுதியில் 2010 ஆம் ஆண்டில் பதிவான அளவைக் காட்டிலும் 10.6 சதவீதம் வரை அதிகரிக்கும்.
2030 ஆம் ஆண்டிற்குப் பிறகு உமிழ்வுகள் அதிகரிக்காது என்று இந்த வருடாந்திர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு விதிமுறைகள் செயல் படுத்தப் பட்டால், 2030 ஆம் ஆண்டிற்குள் 52.4 ஜிகா டன் CO2க்கு சமமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படும்.
பாரீஸ் உடன்படிக்கையால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய 2030 ஆம் ஆண்டில் உலகளாவிய உமிழ்வுகள் 31 ஜிகா டன் CO2க்குச் சமமானதாக மட்டுமே இருக்க வேண்டும்.