முதன்முறையாக, கிராமப் பஞ்சாயத்துகள் ஆனது அடிமட்ட அளவிலான டிஜிட்டல் சேவை வழங்கலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய பிரிவின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்கான இணைய ஆளுகைக்கான தேசிய விருதுகளைப் பெற்றன.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 28வது தேசிய இணைய ஆளுகை மாநாட்டில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
நாடு முழுவதும் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டப் பதிவுகளை மதிப்பீடு செய்த பிறகு, விருது பெற்றவர்களில் பின்வரும் அமைப்புகள் அடங்கும்:
தங்கம்: ரோகிணி கிராமப் பஞ்சாயத்து, மகாராஷ்டிரா
வெள்ளி: மேற்கு மஜ்லிஷ்பூர் கிராமப் பஞ்சாயத்து, திரிபுரா
தேர்வு மன்ற விருதுகள்: பல்சானா கிராமப் பஞ்சாயத்து, குஜராத் & சுகாதி கிராமப் பஞ்சாயத்து, ஒடிசா
குடிமக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நிதி ஊக்கத் தொகைகள் (தங்கப் பிரிவிற்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பிரிவிற்கு 5 லட்சம் ரூபாய்) வழங்கப்படுகின்றன.