இந்திய இரயில்வே நிறுவனமானது இந்திய நாட்டிற்காக 2030 ஆம் ஆண்டு தேசிய இரயில்வே திட்டத்தினைத் தயாரித்துள்ளது.
இது 2030 ஆம் ஆண்டிற்குள் எதிர்காலத்திற்குத் தயாரான இரயில்வே அமைப்பினை உருவாக்குவதற்கான திட்டமாகும்.
சரக்குப் போக்குவரத்தில் இரயில்வேயின் மாதிரிப் பங்கினை 45% ஆக உயர்த்தச் செய்வதற்காக செயல்பாட்டுத் திறன் மற்றும் வணிகக் கொள்கை முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலான உத்திகளை உருவாக்குவதை இந்தத் திட்டம் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.