தேசிய உற்பத்தித் துறைப் புத்தாக்கம் தொடர்பான ஆய்வு
May 7 , 2023 820 days 364 0
இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) மற்றும் ஐக்கிய நாடுகளின் தொழில் துறை மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வாகும்.
ஒட்டு மொத்த மாநிலங்களில் மிகவும் "புத்தாக்கமிக்க" மாநிலமாக கர்நாடகா தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ (DNH&DD), தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முறையே 46.18%, 39.10% மற்றும் 31.90% என்ற அதிக அளவிலான புத்தாக்க நிறுவனங்களின் பங்கினைக் கொண்டுள்ளன.
ஒடிசா, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை முறையே 12.78%, 13.47% மற்றும் 13.71% என்ற குறைந்த அளவிலான புத்தாக்க நிறுவனங்களின் பங்கினைக் கொண்டுள்ளன.