TNPSC Thervupettagam

தேசிய ஊக்கமருந்து தடுப்புச் (திருத்த) சட்டம், 2025

July 22 , 2026 13 hrs 0 min 48 0
  • நாட்டின் ஊக்கமருந்து தடுப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்புச் சட்டம், 2022 மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்புச் (திருத்த) சட்டம், 2025 ஆகியவை நடைமுறைக்கு வந்ததை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • ஊக்கமருந்துப் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், விளையாட்டு வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், விளையாட்டுகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும் இந்தச் சட்டங்கள் ஒரு சட்டப் பூர்வமான கட்டமைப்பை வழங்குகின்றன.
  • இந்தியாவின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு, உலக ஊக்கமருந்து தடுப்புக் குறியீடு (WADA) மற்றும் விளையாட்டில் ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச மாநாடு ஆகியவற்றுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
  • சோதனை, முடிவுகளின் மேலாண்மை, கல்வி, நுண்ணறிவு மற்றும் விசாரணைகள் தொடர்பான நடைமுறைகளை இந்தச் சட்டம் வலுப்படுத்துகிறது.
  • 2025 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம், ஊக்கமருந்து தடுப்பு நிர்வாகத்தில் நிறுவன சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தகராறு தீர்க்கும் வழிமுறைகளை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்