தேசிய ஊக்கமருந்து தடுப்புச் (திருத்த) சட்டம், 2025
July 22 , 2026 6 days 109 0
நாட்டின் ஊக்கமருந்து தடுப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்புச் சட்டம், 2022 மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்புச் (திருத்த) சட்டம், 2025 ஆகியவை நடைமுறைக்கு வந்ததை இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஊக்கமருந்துப் பயன்பாட்டைத் தடுப்பதற்கும், விளையாட்டு வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், விளையாட்டுகளில் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும் இந்தச் சட்டங்கள் ஒரு சட்டப் பூர்வமான கட்டமைப்பை வழங்குகின்றன.
இந்தியாவின் ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு, உலக ஊக்கமருந்து தடுப்புக் குறியீடு (WADA) மற்றும் விளையாட்டில் ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச மாநாடு ஆகியவற்றுடன் சீரமைக்கப்பட்டுள்ளது.
சோதனை, முடிவுகளின் மேலாண்மை, கல்வி, நுண்ணறிவு மற்றும் விசாரணைகள் தொடர்பான நடைமுறைகளை இந்தச் சட்டம் வலுப்படுத்துகிறது.
2025 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம், ஊக்கமருந்து தடுப்பு நிர்வாகத்தில் நிறுவன சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தகராறு தீர்க்கும் வழிமுறைகளை மேம்படுத்துகிறது.