முதலாவது விரிவான தேசிய ஊட்டச்சத்துக் கணக்கெடுப்பானது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
இது ஊட்டச்சத்து குறைபாட்டை அளவிடுவதற்கும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் குழந்தைகள் & இளம் பருவத்தினரில் காணப்படும் சிறுநீரகச் செயல்பாடு போன்ற தொற்றா நோய்களின் விவரங்களைக் கணக்கிடுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வாகும்.
5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினரும், 10-19 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினரும் நீரிழிவு நோய்க்கு உள்ளாகக் கூடியவர்களாகவும் 5 சதவிகிதத்தினர் அதிக எடை கொண்டவர்களாகவும் 5 சதவிகிதத்தினர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.