TNPSC Thervupettagam

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு ஆண்டு விழா

October 21 , 2019 2093 days 1022 0
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition - NIN) சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெளியிட்டார்.
  • இந்திய அஞ்சல்துறையின் “கார்ப்பரேட் மை ஸ்டாம்ப்”  என்ற திட்டத்தின் கீழ் இந்த முத்திரை வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Medical Research - ICMR) கீழ் உள்ள ஒரு பழமையான நிறுவனம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகும்.
  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு ஆண்டு விழாவிற்கான கருப்பொருள் ‘ஊட்டச்சத்தின் மூலம் தேசத்தை மேம்படுத்துதல்’ என்பதாகும்.

இந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தை

  • தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட “ICMR-NIN-நூற்றாண்டு விருது” என அழைக்கப் படுகின்ற ஒருமுறை வழங்கப்படும் விருதானது மருத்துவர் சி.கோபாலனுக்கு அவருடைய மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
  • சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சென்னை எம்.எம்.சியின் பழைய மாணவருமான மருத்துவர் கோபாலன் இந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தையாக கருதப் படுகிறார்.
  • அவருக்கு 2002 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
  • இந்திய மக்களின் ஊட்டச்சத்து நிலை குறித்த அவரது ஆராய்ச்சியானது பின்வருவன போன்ற பல தேசிய ஊட்டச்சத்து திட்டங்களுக்கான அடித்தளத்தை அமைத்தது.
    • இரத்த சோகைக் கட்டுப்பாடு
    • வைட்டமின் ஏ சேர்மானம்
    • ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச்  சேவைகள்
    • உலகளாவிய உப்பு அயோடிசேஷன் மூலம் காய்டர் கட்டுப்பாடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்