தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஊதிய விகிதம்
May 23 , 2024 577 days 908 0
2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGS) 1,229 கோடி ரூபாயை வழங்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் 75% பங்கு ஆனது 921 கோடி ரூபாய் (பொருள் கூறு), 307 கோடி ரூபாய் என்பது 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் 25% பங்காகும்.
இந்திய அரசு ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 25 ரூபாய் ஊதியம் ஆக உயர்த்தியது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் "20 கோடி பணி நாட்களுக்கு" மத்திய அரசின் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசாங்கம் ஆனது அந்த மாதம் தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு MGNREGS திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 319 ரூபாய் ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தது.
MGNREGS திட்டத்திற்கான நிதி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது
தொழில் திறன் சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் (100% மத்திய அரசு நிதி),
குடிமைச் சேவைப் பணிகளுக்கான பொருட்கள் (75% மத்திய அரசு மற்றும் 25% மாநில அரசு) மற்றும்
சம்பளம் மற்றும் இதரச் செலவினங்களுக்காக (100% மத்திய அரசு நிதி).