தேசிய எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது.
2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை மன்றச் சட்டத்தின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (Petroleum and Natural Gas Regulatory Board - PNGRB) ஒரு ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
இது பிராந்தியப் பகுதிகளில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பு அங்கீகாரத்தை வழங்கும்.
தேசிய வரிவாயு விநியோகக் கட்டமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு
இயற்கை எரிவாயுவை அணுகுவதில் நாட்டிற்குள் இருக்கும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை களைவது மற்றும் நாடு முழுவதும் சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளை வழங்குவது.
எரிபொருள் தேவைப்படும் இடங்களை எரிவாயுவின் மூல இடங்களுடன் இணைப்பது மற்றும் பலதரப்பட்ட துறைகளில் உள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வது.
அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகத்திற்காக பல்வேறு நகரங்களில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவது.