இது இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
இந்த நாள் அனைத்து மக்களிடையே ஒற்றுமை, சமத்துவம், அமைதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திரா காந்தி 1966–1977 மற்றும் 1980–1984 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணி ஆற்றினார்.
1971 ஆம் ஆண்டில், 26வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி, அரசியலமைப்பின் 291 மற்றும் 362 ஆகிய சரத்துகளின் கீழ் அரச மானிய (முன்னாள் இளவரசர்களுக்கு பணம் செலுத்துதல்) முறையினை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
1975 ஆம் ஆண்டில், வறுமையைக் குறைத்தல், கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச் சூழலை ஆதரித்தல் ஆகியவற்றிற்காக இருபது அம்சத் திட்டத்தைத் தொடங்கினார்.
அவரது "கரிபி ஹடாவோ" (வறுமையை நீக்குதல்) என்ற முழக்கம் நலத்திட்டங்களுக்கு வழிகாட்டியதோடு, ஏழைகளுக்கு உதவ ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1974–1979) மாற்றங்களைச் சேர்த்தது .