ஒரு தேசிய ஒருங்கிணைப்பு மையத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களது முக்கிய கோட்டைகள் பற்றிய தரவு தளமாகவும், உளவுத்துறை சேகரிப்பு மற்றும் மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான இணைதிறன் கொண்ட புள்ளியாகவும் செயல்படவுள்ளது.
ஆந்திரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற பகுதிகளில் மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் அனுபவத்தையும் அறிவையும் இந்த மையம் பயன்படுத்த இருக்கிறது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்களின் எண்ணிக்கையும் 465 இல் இருந்து 250 ஆகக் குறைந்துள்ளது.