தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது
November 3 , 2017 2844 days 969 0
மத்திய நிதி அமைச்சகம், தேசிய ஓய்வூதியத் திட்டம் – தனியார் துறை என்ற பிரிவின் கீழ், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை, தற்போதைய 60 வயதிலிருந்து 65 வயதாக உயர்த்தியுள்ளது.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்த நடவடிக்கை 60-65 வயது கொண்ட மக்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கும், 70வது வயது வரை பங்களிப்பதற்கும் அளிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
தற்போது வரை 18 வயது முதல் 60 வயது வரையிலான தனிநபர்கள் மட்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர முடியும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004-ல் அரசு ஊழியர்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 2009ம் ஆண்டு அனைத்து குடிமகன்களுக்குமான திட்டமாக அறிவிக்கப்பட்டது.