தேசிய கணக்குகளின் அமைப்பு 2025 என்பது SNA 2008 அமைப்பினை மாற்றி அமைத்த ஒரு திருத்தப்பட்ட சர்வதேசக் கட்டமைப்பாகும்.
இது நிலைத்தன்மை, சமத்துவமின்மை மற்றும் ஊதியம் பெறாத வேலையை ஒருங்கிணைப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அப்பாலான கணக்கீட்டினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஐ.நா. புள்ளி விவர ஆணையத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
SNA 2025 ஆனது, வளர்ச்சி அளவீடுகளை நியாயத்தன்மை மற்றும் சூழல் சார்ந்த சம நிலையுடன் சீரமைப்பதன் மூலம் இலக்கு சார்ந்த நலன்புரிதல், பாலின வேறுபாட்டிற்கு ஏற்ற கொள்கைகள் மற்றும் நிலையான பொருளாதாரத் திட்டமிடலை செயல்படுத்துகிறது.