புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் ஸ்ரீனிவாச இராமானுஜன் (1887–1920) பிறந்த நாளை இந்த நாள் குறிக்கிறது.
இந்திய அரசு ஆனது 2011 ஆம் ஆண்டில் இந்த நாளை அறிவித்தது.
கணிதத்தில் ஆர்வம் காட்டவும், அறிவியல் சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை ஊக்குவிக்கவும் மாணவர்களை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு, தசம முறை மற்றும் எதிர்மறை எண்களின் ஆரம்பகாலக் கருத்துக்கள் உட்பட இந்தியா ஒரு வளமான கணிதப் பாரம்பரியத்தைக் கொண்டு உள்ளது.
எண் கோட்பாடு, முடிவிலித் தொடர்கள், தொடர் பின்னங்கள் மற்றும் கணிதப் பகுப்பாய்வு ஆகியவற்றில் இராமானுஜர் ஆற்றியப் பெரும் பங்களிப்புகள் ஆனது கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில் நவீன ஆராய்ச்சியை ஊக்குவித்து உள்ளது.