TNPSC Thervupettagam

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பு 2021

September 13 , 2021 1406 days 800 0
  • தேசிய நிறுவனங்களுக்கான தரவரிசைக் கட்டமைப்பை மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
  • இது இந்தியாவின் சிறந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை பட்டியலிடச் செய்கிறது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தத் தரவரிசையில் பங்கு பெற்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 6000 ஆகும்.
  • இது ஒட்டுமொத்தமாக, பல்கலைக்கழகம், மேலாண்மை, கல்லூரி, மருந்தகம், மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை, ARIIA (புதுமையான சாதனைகள் குறித்த நிறுவனங்களின் அடல் தரவரிசை - Atal Ranking of Institutions on Innovation Achievements), சட்டம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற பதினொருப் பிரிவுகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
  • கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைப் பயிற்சி, பட்டப் படிப்பு முடிவுகள், இலக்கைச் சென்று அடைதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach and Inclusivity) மற்றும் கருத்து ஆகிய ஐந்து பரந்த பொதுவான பிரிவுகளின் கீழ் இந்தக் கட்டமைப்பு கல்வி நிறுவனங்களைத் தரவரிசை படுத்துகிறது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்

  • ஐஐடி மதராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக உள்ளது.
  • ஐஐடி மதராஸ் பொறியியல் பிரிவில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • ஐஐடி மதராஸ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆராய்ச்சி’ எனும் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஐஐஎம் அகமதாபாத் மேலாண்மைப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
  • ஐஐஎஸ்சி பெங்களூரு நிறுவனம் பல்கலைக்கழகப் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது
  • ஐஐஎஸ்சி பெங்களூரு நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “ஆராய்ச்சி” எனும் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.
  • டெல்லிப் பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் என்ற கல்வி நிறுவனமானது கல்லூரிப் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • புதுடெல்லி ஜாமியா ஹம்தார்ட் கல்வி நிறுவனமானது மருந்துக் கல்விப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது.
  • மருத்துவப் பிரிவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்), டெல்லி முதலிடத்தில் உள்ளது.
  • வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவப் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு

  • முதல் 100 இடங்களில் மொத்தம் 19 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
  • கடந்த ஆண்டு, அண்ணாப் பல்கலைக்கழகம் 20வது இடத்தில் இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அதன் தரவரிசை 25 என்ற இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • இதே போல், கடந்த ஆண்டு 41வது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 47வது இடத்தில் உள்ளது.
  • கடந்த ஆண்டு 21வது இடத்தில் இருந்த கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு 22வது இடத்தில் உள்ளது.
  • ஆனால் கடந்த ஆண்டு 24 ஆம் இடத்தில் இருந்த என்ஐடி-திருச்சி  கல்வி நிறுவனம் இந்த ஆண்டு 23 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • கடந்த ஆண்டில் 6வது இடத்தில் இருந்த சென்னையின் லயோலா கல்லூரி  இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்