26-வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸானது (Children’s Science Congress-NCSC) சமீபத்தில் ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக்கால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ஆண்டின் NCSC-ன் கருத்துரு “தூய்மையான, பசுமையான மற்றும் சுகாதாரமான நாட்டிற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்” (Science, Technology and Innovations for a clean, Green and Healthy Nation) என்பதாகும்.
இது குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்திற்கான திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.