TNPSC Thervupettagam

தேசிய குவாண்டம் திட்டம்

April 22 , 2023 834 days 464 0
  • 6,003 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு ஆண்டு கால அளவிலான தேசிய குவாண்டம் (துளிமம்) திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது குவாண்டம் தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆறு முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்திய நாட்டினை இடம் பெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமெரிக்கா, சீனா, பிரான்சு, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய 5 நாடுகள்  குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையில் மட்டுமே உள்ளன, என்றாலும், இந்தத் தொழில்நுட்பத்தின் பெரும் பயன்பாட்டு நிலைக்கு அவை இன்னும் முன்னேறவில்லை.
  • குவாண்டம் தொழில்நுட்பம் என்பது புதிய தொழில்நுட்பங்களின் உருவாக்கத்திற்கு குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை ஆய்வு செய்து பயன்படுத்தச் செய்கின்ற இயற்பியல் மற்றும் பொறியியலின் ஒரு துறையாகும்.
  • இயற்பியலின்  வழக்கமான விதிகள் பொருந்தாத பருப்பொருள் மற்றும் அதன் ஆற்றல் ஆகியவற்றின் செயல்பாடுகளை மிகத் துல்லியமாக நன்கு விவரிக்கச் செய்கிற குவாண்டம் இயக்கவியல் என்பது இயற்பியலின் ஒரு உட்பிரிவாகும்.
  • குவாண்டம் தொழில்நுட்பமானது குவாண்டம் கணினி முறை, குவாண்டம் மறை குறியாக்கம் மற்றும் குவாண்டம் உணர்வியல் போன்ற பல்வேறு வகையான தொழில் நுட்பங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்