TNPSC Thervupettagam

தேசிய சட்ட சேவைகள் தினம் 2026 - நவம்பர் 09

November 11 , 2026 4 days 81 0
  • இந்தியாவில் இலவச சட்ட உதவி மற்றும் நீதிக்கு சமமான அணுகல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று நடைமுறைக்கு வந்த சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம், 1987-இன் செயல்பாட்டைக் குறிக்கும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய அரசியலமைப்பின் 39A வது சரத்து சமமான நீதி மற்றும் இலவச சட்ட உதவியை வழங்குகிறது.
  • தகுதியுள்ளவர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்பான உச்ச சட்டரீதியான அமைப்பு தேசிய சட்ட சேவைகள் ஆணைக்குழு (NALSA) ஆகும்.
  • பெண்கள், குழந்தைகள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட தகுதியான குழுக்களுக்கு இலவச சட்ட உதவி கிடைக்கும்.
  • லோக் அதாலத்துகள் (மக்கள் நீதிமன்றங்கள்) பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் வழக்குகளைத் தீர்க்கவும், வழக்கமான நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கவும் உதவுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்