தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
January 26 , 2019 2446 days 911 0
மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (GSTAT - Goods and Services Tax Appellate Tribunal) உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
GSTAT - சிறப்பம்சங்கள்
தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயமானது புது தில்லியில் அமையவிருக்கிறது.
இது இந்த தீர்ப்பாயத்தின் தலைவரால் தலைமை தாங்கப்படும். மேலும் இந்த தீர்ப்பாயமானது ஒரு மத்திய தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஒரு மாநில தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோரைக் கொண்டிருக்கும்.
இது சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான இரண்டாவது முறையீட்டு மன்றமாகும். மேலும் இது மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே வாழும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதலாவது பொது மன்றமாகும்.
மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவைகள் வரி சட்டத்தின்படி மேல்முறையீட்டு ஆணையங்களால் வழங்கப்படும் முதலாவது மேல்முறையீட்டு தீர்ப்பினை எதிர்த்து GSTAT-ல் மேல்முறையீடு செய்ய முடியும்.
நாடெங்கிலும் GST செயல்படுத்தும் விதம் மற்றும் GST-ன் கீழ் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சீர்மை தன்மையை GSTAT ஆனது உறுதி செய்யும்.