இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு சிறுதொழில்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறுதொழில்களுக்கான விரிவான கொள்கைத் தொகுப்பை அரசாங்கம் அறிமுகப் படுத்திய பிறகு 2000 ஆம் ஆண்டில் இது முறையாக அங்கீகரிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், ஒரு சிறு நிறுவனம் ₹25 கோடி வரை முதலீட்டையும், ₹100 கோடி வரை ஆண்டு வருவாயையும் கொண்டிருக்கலாம்.
இந்தியாவின் GDP-யில் 31.1 சதவீதமும், உற்பத்தி வெளியீட்டில் 35.4 சதவீதமும், ஏற்றுமதியில் 48.58 சதவீதமும் MSME-கள் (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) பங்களிக்கின்றன.
அரசாங்க ஆதரவில் TReDS (வர்த்தக வரவுகள் தள்ளுபடி அமைப்பு), உதயம் பதிவு, கடன் உத்தரவாதங்கள், பொது கொள்முதல் ஆதரவு மற்றும் சாம்பியன்ஸ் (CHAMPIONS) இணைய தளம் ஆகியவை அடங்கும்.