தேசிய சிறுபான்மையினர் ஆணையமானது புதிய குழுக்களை “சிறுபான்மையினர்களாக” அறிவிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளது.
இந்துக்கள் பெரும்பான்மையாக இல்லாத மாநிலங்களில் இந்துக்களை “சிறுபான்மையினராக” அதிகாரப் பூர்வமாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி
சிறுபான்மையினர் ஆணையம் ஒரு நிர்வாக ஆணையின் படி 1978 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் இயற்றப்பட்டதற்குப் பின்பு இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக உருவாகியது.