தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் – டிசம்பர் 18
December 21 , 2022 968 days 373 0
இந்தியாவிலுள்ள மதம், இனம், வர்க்கம் அல்லது மொழி சார்ந்த சிறுபான்மையினரின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.
மத்திய அரசானது, 1992 ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டத்தின் கீழ் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தினை நிறுவியது.
இதைத் தொடர்ந்து, ஐந்து மதச் சமூகங்களும் நாடு முழுவதும் சிறுபான்மையினச் சமூகங்களாக இந்திய அரசிதழில் மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த மதச் சமூகங்கள் முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜோராஸ்ட்ரியர்கள் (பார்சி) ஆகியோர் ஆவர்.
2014 ஆம் ஆண்டில் சிறுபான்மைச் சமூகங்களாகக் கருதப்படும் மதச் சமூகங்களின் பட்டியலில் சமணர்களும் சேர்க்கப்பட்டனர்.
2022 ஆம் ஆண்டிற்கான இத்தினமானது, "All in 4 Minority Rights" என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்பட்டது.
இது ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று மத அல்லது மொழியியல் அல்லது தேசிய அல்லது இனம் சார்ந்த சிறுபான்மையினருக்குச் சொந்தமான தனிநபர் உரிமைகள் பற்றிய ஒரு அறிக்கையை ஏற்றுக் கொண்டு வெளியிட்டது.
சிறுபான்மையினர் உரிமைகள் தினமானது, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான சுதந்திரம் மற்றும் சம வாய்ப்புகளுக்கான உரிமை ஆகியவற்றினை நிலை நிறுத்தச் செய்வதோடு, அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.