தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் – டிசம்பர் 18
December 20 , 2021 1385 days 540 0
இந்தியாவில் சிறுபான்மையினருக்கான சுதந்திர உரிமை மற்றும் சம வாய்ப்புகளை நிலைநாட்டுவதற்கும் சிறுபான்மையினரின் கௌரவம் மற்றும் மரியாதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1992 ஆம் ஆண்டில் டிசம்பர் 18 ஆம் தேதியினை சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக அறிவித்தது.
இந்தியாவில் இது தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் பொறுப்பாகும்.
இந்தியாவில் இந்த ஆணையமானது 1992 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மையினர் ஆணையர் சட்டத்தின் கீழ் மத்திய அரசினால் நிறுவப்பட்டது.