TNPSC Thervupettagam

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்

December 14 , 2020 1613 days 780 0
  • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா முழுவதும் வெளியிடப்படும்.
  • பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆகஸ்ட் மாதம் தனது சுதந்திர தின உரையின் போது இதை அறிவித்தார்.
  • தேசிய டிஜிட்டல் சுகாதார மேலாண்மைக் கொள்கையே தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் அடிப்படையாகும்.
  • டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்தியா ஒரு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஒரு தனித்துவமான சுகாதாரக் கணக்கை வழங்கும், இதன்மூலம் அவர்களால் நாடு முழுவதும் சுகாதாரப் பராமரிப்புக்கு ஏற்படும் தேவையைச்  சிக்கலில்லாமல் அணுக முடியும்.
  • தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டமானது ஒன்றியப் பிரதேசங்களில் சோதனை முறையில் நடந்தேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்