தேசிய தகவல் மையத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்
January 12 , 2019 2405 days 1000 0
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (Ministry of Electronics and Information Technology) தேசிய தகவல் மையத்தின் (National Informatics Centre - NIC) கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command and Control Centre - CCC) மற்றும் செயற்கை நுண்ணறிவில் அதன் சிறப்பு மையம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்துள்ளது.
இது புத்தாக்க முறையில் புதிய தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை அளிப்பதையும் மத்திய மற்றும் மாநில அளவில் தேசிய தகவல் மையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களுக்கான தீர்வுகளை சோதித்து மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அரசாங்க சேவைகளை குடிமக்களுக்கு அளிப்பதை மேம்படுத்தும் பணிக்காக பொறுப்புள்ள ஆட்சிக்கான “அனைத்தையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு” என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.