தேசிய தன்னார்வ இரத்த தான விழிப்புணர்வு தினம் 2026 - அக்டோபர் 01
October 3 , 2026 3 days 38 0
முறையான, தன்னார்வ மற்றும் ஊதியம் பெறாத இரத்த தானத்தை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் இரத்த சேகரிப்பில் சுமார் 75% தன்னார்வ தானத்தின் மூலம் பெறப் படுகிறது.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நாடு தழுவிய மாபெரும் தன்னார்வ இரத்த தான முகாம் இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் பொது விழிப்புணர்வை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.
2025 ஆம் ஆண்டில் இரத்த சேகரிப்பு செயல்பாட்டிற்காக மாநிலங்களில் ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகியவை முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன; வடகிழக்கு மாநிலங்களில் மிசோரம் மற்றும் சிக்கிம் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
ஒன்றியப் பிரதேசங்களில் சண்டிகர் மற்றும் டெல்லி முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு One Drop of Humanity. Give Blood. Save Lives என்பதாகும்.