இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கௌரவிப்பதோடு, புத்தாக்கம் மற்றும் தற்சார்பின் ஆற்றலை நாட்டிற்கு நினைவூட்டுகிறது.
இந்தத் தினமானது 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சக்தி' என்றும் அழைக்கப்படும் போக்ரான் II அணுசக்தி சோதனைகளின் வெற்றியை நினைவு கூருகிறது.
ஹன்சா-3 எனப்படும் தேசிய விண்வெளி ஆய்வகத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் விமானத்தின் வெற்றிகரமான சோதனையும் அதே நாளில் தான் நடைபெற்றது.