TNPSC Thervupettagam

தேசிய தொழில்நுட்ப தினம் 2026 - மே 11

May 15 , 2026 15 hrs 0 min 20 0
  • நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைக் கொண்டாடும் வகையில் இந்தியா இந்நாளை அனுசரித்துள்ளது.
  • 1998 ஆம் ஆண்டு மே 11 அன்று ராஜஸ்தானில் சக்தி நடவடிக்கை எனும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளின் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப் படுகிறது.
  • இது அறிவியல், கண்டுபிடிப்பு, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கிறது.
  • இந்திய அரசு 1999-ஆம் ஆண்டில் மே 11 ஆம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவித்தது.
  • தேசிய வளர்ச்சியில் அறிவியலாளர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் பங்கினை இந்நாள் முன்னிலைப்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்