தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி
March 13 , 2022 1255 days 639 0
தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியானது 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் ஓர் அனைத்திந்திய நிதியியல் நிறுவனமாக (All India Financial Institution) ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்பார்வையிடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ், NABARD, NHB மற்றும் SIDBI மற்றும் EXIM வங்கி ஆகிய அனைத்திந்திய நிதியியல் நிறுவனங்கள் உள்ளன.
தேசிய நிதியியல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியானது இந்திய ரிசர்வ் வங்கியின் கீழான 5வது அனைத்திந்திய நிதியியல் நிறுவனமாகும்.
இது இந்தியாவில் நீண்டகால ரீதியில் உள்கட்டமைப்பு நிதி வழங்கீட்டின் மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கான ஒரு மேம்பாட்டு நிதியியல் நிறுவனமாக நிறுவப் பட்டுள்ளது.