நீதிபதி M. வேணுகோபால் அவர்கள் இந்தத் தீர்ப்பாயத்தின் புதிய தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பாயமானது தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் ஆணைகளுக்கு எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்காக 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.
மேலும் நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டின் கீழ் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தினால் அளிக்கப்பட்ட ஆணைகள் மற்றும் இந்திய நொடித்தல் மற்றும் திவால் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆணைகள் ஆகியவற்றுக்கு எதிரான மேல் முறையீடுகளையும் இந்தத் தீர்ப்பாயம் விசாரணை செய்யும்.
இது இந்தியப் போட்டி ஆணையத்தினால் அளிக்கப்பட்ட ஆணைகள் (அ) மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் (அ) வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு எதிரான மேல் முறையீட்டினையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்கான ஒரு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமாகும்.