தேசிய நீர்வழித்தடம்-2 இல் முதல் சர்வதேச சரக்கு பயணம்
October 11 , 2026 27 days 180 0
அசாமின் திப்ருகாரில் இருந்து வங்கதேசத்தின் டாக்கா வரையிலான முதல் சர்வதேச சரக்கு கப்பல் பயணத்தை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த முதல் பயணமானது, அசாம் பெட்ரோ-கெமிக்கல்ஸ் லிமிடெட் (APCL) தயாரித்த மெத்தனாலை போகிபீல் முனையத்திலிருந்து டாக்காவில் உள்ள பங்கான் துறைமுகத்திற்கு கொண்டு சென்றது.
இந்தச் சரக்கு தேசிய நீர்வழித்தடம்-2 (NW-2), பிரம்மபுத்திரா நதி மற்றும் இந்தியா-வங்காளதேச நெறிமுறை வழித்தடம் (IBPR) வழியாகப் பயணித்தது.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு திப்ருகாரிலிருந்து வெளிநாட்டுத் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல் செல்வது இதுவே முதல் முறையாகும்.
வடகிழக்கு இந்தியாவில் மலிவான, பசுமையான மற்றும் திறமையான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிப்பதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.