1962 ஆம் ஆண்டு முதன்முதலில் அனுசரிக்கப்பட்ட தேசிய நூலகர் தினம் ஆனது, இந்தியாவில் நூலக அறிவியலின் தந்தை டாக்டர் S.R. இரங்கநாதனின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
இவர் தஞ்சாவூரின் சீர்காழியில் 1892ஆம் ஆண்டு ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்தார்.
இவரின் சுயசரிதையானது, அவரது காலத்திலேயே A Librarian Looks Back என்ற பெயரில் தொடராக வெளிவந்தது.
மேலும் இவர் "The Five Laws of Library Science" எனும் நூலையும் எழுதியுள்ளார்.
எழுத்தறிவு, கல்வி மற்றும் தகவல் அணுகலை மேம்படுத்துவதில் நூலகர்களின் பங்கை இந்தத் தினம் கௌரவிக்கிறது.