தேசிய பயணிகள் விடுதி நிலையங்கள்- அழகாக்குதல் போட்டி
May 13 , 2018 2651 days 947 0
மகாராஷ்டிராவிலுள்ள பல்லார்ஷா மற்றும் சந்திரபூர் ஆகிய ரயில் நிலையங்கள் தேசிய பயணிகள் விடுதி நிலையங்கள் அழகாக்குதல் போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளன.
தடோபா தேசியப் பூங்காவிலுள்ள வனவிலங்குகள் மற்றும் உள்ளூர் பழங்குடியின கலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்கள் ஆகியவற்றால் மத்திய இரயில்வேயின் நாக்பூர் மண்டலம் தன்னுடைய மேற்கண்ட இரு ரயில் நிலையங்களையும் அழகுபடுத்தியுள்ளது.
இரண்டாம் இடத்தை பீகார் மாநிலத்தின் மதுபானி ரயில் நிலையம், தமிழ்நாட்டின் மதுரை ரயில் நிலையம் ஆகியவை பெற்றுள்ளன. இவ்விரு ரயில் நிலையங்களும் தங்களுடைய உள்ளூர் கலாச்சாரத்தின் பிரபலமான காட்சிகளை சித்தரித்துள்ளன.
மூன்றாம் பரிசு, மூன்று ரயில் நிலையங்களுக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.