பறவைகள் வளங்காப்பு மற்றும் பறவை வாழ்விடங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பறவைகள் சுரண்டப்படுவதை எதிர்ப்பதற்காக வேண்டி, குறிப்பாக செல்லப்பிராணி வர்த்தகத்தில், பறவைகள் நலக் கூட்டணியால் 2002 ஆம் ஆண்டில் இந்த நாள் நிறுவப் பட்டது.
அறிவியல் ரீதியாக பாவோ கிறிஸ்டடஸ் என்று அழைக்கப்படுகின்ற இந்திய மயில், 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் தேசியப் பறவையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
மயில் 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப் படுகிறது.
இந்திய மயில் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.