TNPSC Thervupettagam

தேசிய பாதுகாப்பு வீத வரி மசோதா, 2025

December 8 , 2025 15 days 101 0
  • மக்களவையானது 2025 ஆம் ஆண்டு சுகாதாரப் பாதுகாப்பு தேசிய பாதுகாப்பு வீத வரி மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தியாவின் சுகாதாரம் மற்றும் தேசியப் பாதுகாப்பை ஆதரிப்பதற்காக பான் மசாலா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு வீத வரி விதிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த வீத வரித் தொகை என்பது ஒரு இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை பைகளை உற்பத்தி செய்கிறது மற்றும் ஒவ்வொரு பையிலும் பேக் செய்யப்பட்ட பான் மசாலாவின் எடையைப் பொறுத்தது ஆகும்.
  • ஓர் இயந்திரத்திற்கு மாதத்திற்கு 1.01 கோடி முதல் 2.5 கோடி ரூபாய் வரை வீத வரி விதிக்கப் படுகிறது என்ற நிலையில் மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
  • உலகளாவிய வயது வந்தோர் புகையிலைப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் (GATS-2) படி, இந்தியாவில் சுமார் 42% ஆண்களும் 14% பெண்களும் புகையிலையினைப் பயன்படுத்துகின்றனர்.
  • இதனோடு, உலகின் புகையிலைப் பயன்பாட்டாளர்களில் இந்தியாவின் பங்கு 70% ஆக உள்ளது.
  • 2016-17 ஆம் ஆண்டில் இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டின் பொருளாதாரச் செலவினம் 1.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
  • வசூலிக்கப்படும் வரிகளில் 41% மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்