TNPSC Thervupettagam

தேசிய புலம்பெயர்வுக் கணக்கெடுப்பு 2026–27

November 18 , 2025 10 days 51 0
  • புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (MoSPI) ஆனது 2026 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தேசியப் புலம் பெயர்வு கணக்கெடுப்பை நடத்த உள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பு ஆனது, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களையும் உள்ளடக்கும்.
  • இது புலம்பெயர்வு விகிதங்கள், குறுகிய கால மற்றும் பருவகாலப் புலம்பெயர்வு, புலம் பெயர்வுக்கான காரணங்கள், புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு மற்றும் வருமான விவரங்கள் மற்றும் சொந்த இடங்களுக்கு திரும்பும் புலம்பெயர்வு பற்றிய தரவுகளைச் சேகரிக்கும்.
  • குறுகிய காலப் புலம்பெயர்ந்தோர் என்பது வேலைவாய்ப்பு அல்லது வேலை தேடலுக்காக கடந்த ஆண்டில் பதினைந்து நாட்கள் முதல் ஆறு மாதங்கள் வரை தங்கள் வழக்கமான வசிப்பிடத்திலிருந்து விலகி இருந்த ஒரு நபராக வரையறுக்கப் படுகிறது.
  • நவீனப் புலம்பெயர்வுப் போக்குகளை மிகவும் துல்லியமாக பதிவு செய்ய, முழு குடும்பத்தினையும் விட தனிப்பட்டப் புலம்பெயர்வில் இந்தக் கணக்கெடுப்பு கவனம் செலுத்தும்.
  • இந்தியா முழுவதும் உள்நாட்டு புலம்பெயர்வு குறித்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளை வழங்குவதன் மூலம் இந்தத் தரவு நகர்ப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத் திட்டமிடல் ஆகியவற்றை ஆதரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்